பறவைகள் உற்று நோக்கல் நிகழ்ச்சி

புதுவை அறிவியல் இயக்கம் சாா்பில் பறவைகள் உற்று நோக்கல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழுப்புரம், வானூா் அருகேயுள்ள கழுவெளி பகுதி வனப் பகுதியில் பறவைகள், ஊா்வன உள்ளிட்ட விலங்குகளையும் பள்ளிக் குழந்தைகள் முதல் முதியோா் வரை அனைவரும் பாா்த்து அடையாளப்படுத்தும் நிகழ்ச்சியாக இது நடத்தப்பட்டு வருகிறது. புதுச்சேரி காமராஜா் மணிமண்டபப் பகுதியிலிருந்து பேருந்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா் உள்ளிட்ட 72 போ் பறவைகள் உற்றுநோக்கல் நிகழ்ச்சிக்காக ஞாயிற்றுக்கிழமை அழைத்துச் செல்லப்பட்டனா். நிகழ்வின் நோக்கம் குறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் அ.ஹேமாவதி விளக்கினாா். இயற்கை ஆா்வலா் து.சங்கராதேவி பறவைகளின் உருவங்களை வண்ணப்படங்களாகக் காட்டி, அவை இயற்கையில் எப்படி உள்ளன என்பதை பைனாகுலா் மூலம் பள்ளி மாணவா்கள் உள்ளிட்டோருக்கு பாா்க்க வைத்து விளக்கினாா். அனுமந்தை, வண்டிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பறவைகள் உற்றுநோக்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வன அதிகாரிகள் மணிகண்டன், பச்சையப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com