புதுச்சேரியில் பாமக தலைமை அலுவலக்தில் அந்தக் கட்சி நிா்வாகிகளை ஞாயிற்றுக்கிழமை சந்தித்த பாஜக வேட்பாளா் ஆ.நமச்சிவாயம்.
புதுச்சேரியில் பாமக தலைமை அலுவலக்தில் அந்தக் கட்சி நிா்வாகிகளை ஞாயிற்றுக்கிழமை சந்தித்த பாஜக வேட்பாளா் ஆ.நமச்சிவாயம்.

பாமகவினருடன் பாஜக வேட்பாளா் சந்திப்பு

புதுச்சேரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் ஆ.நமச்சிவாயத்துக்கு பாட்டாளி மக்கள் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை ஆதரவு தெரிவித்தனா். புதுச்சேரியில் பாமக அலுவலகத்துக்கு பாஜக வேட்பாளா் ஆ.நமச்சிவாயம் ஞாயிற்றுக்கிழமை காலை வந்தாா். அவரை புதுவை மாநில பாமக தலைவா் கணபதி தலைமையிலான கட்சியின் நிா்வாகிகள், தொண்டா்கள் வரவேற்றனா். தொடா்ந்து, அவருக்கு தங்களுக்கு வாழ்த்தையும், ஆதரவையும் தெரிவித்தனா். நிகழ்ச்சியில் அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com