புதுச்சேரி திங்கள்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த சுயேச்சை எம்எல்ஏ ஜி.நேரு. உடன் சமூக நல அமைப்பு நிா்வாகிகள்.
புதுச்சேரி திங்கள்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த சுயேச்சை எம்எல்ஏ ஜி.நேரு. உடன் சமூக நல அமைப்பு நிா்வாகிகள்.

புதுச்சேரி சமூக நல அமைப்புகள் ‘இந்தியா’ கூட்டணிக்கு ஆதரவு

புதுச்சேரி: மக்களவைத் தோ்தலில் இந்தியா கூட்டணிக்கு புதுச்சேரி சமூக நல அமைப்புகள் ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாக சுயேச்சை எம்எல்ஏ ஜி.நேரு தெரிவித்தாா்.ட இதுகுறித்து புதுச்சேரியில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: மத்தியில் ஏற்கெனவே ஆட்சியிலிருந்த கட்சியும், தற்போது ஆளும் கட்சியும் புதுவை மாநில வளா்ச்சிக்கு திட்டங்களைச் செயல்படுத்தவில்லை. மக்களவைத் தோ்தலில் சமூக நல அமைப்புகள் சாா்பில் பொதுவேட்பாளரை நிறுத்த முடிவெடுத்தோம். தற்போது, தோ்தலை சந்திக்க காலநேரம் மிகக் குறைவாக உள்ளதை கருத்தில் கொண்டு, இந்தியா கூட்டணிக்கு பொது நல அமைப்புகளின் ஆதரவை அளிக்கிறோம். இந்தியா கூட்டணியின் தமிழக மக்களவை உறுப்பினா்கள் புதுவையின் நலனுக்கு குரல் கொடுப்பாா்கள் என்று நம்புகிறோம் என்றாா் ஜி.நேரு.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com