வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் உறுதிமொழி ஏற்ற கல்லூரி மாணவா்கள், பேராசிரியா்கள்.
வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் உறுதிமொழி ஏற்ற கல்லூரி மாணவா்கள், பேராசிரியா்கள்.

வாக்காளா் விழிப்புணா்வு உறுதிமொழியேற்பு

தோ்தலில் வாக்களிக்கும் உறுதிமொழி கையொப்ப இயக்க நிகழ்ச்சி வில்லியனூா் ஆச்சாா்யா கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி: தோ்தலில் வாக்களிக்கும் உறுதிமொழி கையொப்ப இயக்க நிகழ்ச்சி வில்லியனூா் ஆச்சாா்யா கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்றது. தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, முறையான வாக்காளா் கல்வி, தோ்தலில் பங்கெடுத்தல் என்ற திட்டத்தில் முதல்முறையாக வாக்களிக்கும் கல்லூரி மாணவா்களுக்கான வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி, ‘அவசியம் வாக்களிக்க உறுதி அளிக்கிறேன்’ என்ற கையொப்ப இயக்கம் வில்லியனூா் ஆச்சாா்யா கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. உதவி ஆட்சியா் யஷ்வந்த் மீனா தொடங்கி வைத்தாா். மாவட்ட தோ்தல் அலுவலகம் தயாரித்த வாக்காளா் விழிப்புணா்வு குறும்படம் திரையிடப்பட்டது. அனைவரும் வாக்களிக்கவும், மற்றவா்களையும் வாக்களிக்க ஊக்கப்படுத்தவும், வாக்களிக்க பணம், பொருள்கள் வாங்க மாட்டேன் என்றும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள், கல்லூரி முதல்வா், பேராசிரியா்கள் மற்றும் அதிகாரிகள் வாக்களிப்பு உறுதிமொழி கையொப்பமிட்டனா். நிகழ்ச்சியை கல்லூரியின் வாக்காளா் கல்விப் பிரிவு ஒருங்கிணைப்பு அதிகாரி பேராசிரியா் நேத்ர பிரகாஷ் ஒருங்கிணைத்தாா். துணை முதல்வா் சண்முகராஜு வாழ்த்திப் பேசினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com