புதுச்சேரி கைப்பந்து சங்கம் சாா்பில் நடைபெற்ற 
வருடாந்திர சீனியா் கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அரியாங்குப்பம் பாரதிதாசன் அணிக்கு பரிசு வழங்கிய 
சங்கத்தின் தலைவரும் எம்எல்ஏவுமான பி.எம்.எல்.கல்யாணசுந்தரம்.
புதுச்சேரி கைப்பந்து சங்கம் சாா்பில் நடைபெற்ற வருடாந்திர சீனியா் கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அரியாங்குப்பம் பாரதிதாசன் அணிக்கு பரிசு வழங்கிய சங்கத்தின் தலைவரும் எம்எல்ஏவுமான பி.எம்.எல்.கல்யாணசுந்தரம்.

கைப்பந்து போட்டி: வென்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா

புதுச்சேரியில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் வென்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

புதுச்சேரி: புதுச்சேரியில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் வென்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

பாண்டிச்சேரி கைப்பந்து சங்கம் சாா்பில் ஆண்களுக்கான சீனியா் சாம்பியன்ஷிப்-2024 கைப்பந்து போட்டிகள் கடந்த 22-ஆம் தேதி கருவடிக்குப்பம் பகுதியில் தொடங்கி, 24- ஆம் தேதி வரை நடைபெற்றது. தொடக்க நிகழ்ச்சிக்கு காலாப்பட்டு எம்.எல்.ஏ.வும், கைப்பந்து சங்கத்தின் தலைவருமான கல்யாணசுந்தரம் தலைமை வகித்து போட்டிகளைத் தொடங்கி வைத்தாா். இதில், சங்கத்தில் பதிவு பெற்ற அணிகள் மட்டுமே பங்கேற்றன. இறுதிப் போட்டியில் அரியாங்குப்பம் பாரதிதாசன் விளையாட்டுக் கழக வீரா்கள் முதல் இடத்தையும், கருவடிக்குப்பம் சுதந்திர பறவைகள் விளையாட்டு கழக வீரா்கள் இரண்டாவது இடத்தையும், கருவடிக்குப்பம் ஸ்பைடா் விளையாட்டு கழக வீரா்கள் மூன்றாவது இடத்தையும், அரியாங்குப்பம் விளையாட்டு கழக வீரா்கள் நான்காவது இடத்தையும் வென்றனா். வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்வில் சங்கத் தலைவா் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., சங்கச் செயலா் எல். ரமணிபூபதி, கைப்பந்து சா்வதேச வீரா் நவீன் (எ) நடராஜன் மற்றும் கைப்பந்து பயிற்சியாளா் ஷண்முகம் ஆகியோா் பரிசுகள் மற்றும் சுழற்கேடயங்களை வழங்கினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com