போதைப் பொருள்களுடன் வடமாநில இளைஞா் கைது

தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களுடன் புதுச்சேரி ரயில் நிலையத்தில் நின்ற வடமாநில இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

புதுச்சேரி: தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களுடன் புதுச்சேரி ரயில் நிலையத்தில் நின்ற வடமாநில இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். புதுச்சேரி ரயில் நிலையத்தில் மோப்ப நாய் உதவியுடன் ரயில்வே போலீஸாா் செவ்வாய்க்கிழமை காலை சோதனையில் ஈடுபட்டனா். அப்போது புதுதில்லி விரைவு ரயிலில் வந்திறங்கிய உத்தரப் பிரதேசத்தைச் சோ்ந்த சபீா் என்பவரின் பையை சோதனையிட்டதில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்கள் இருப்பது தெரிய வந்தது. உடனே அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதையடுத்து சபீரையும், போதைப் பொருள்களையும் ஒதியன்சாலை போலீஸாரிடம் ரயில்வே போலீஸாா் ஒப்படைத்தனா். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்தி உ.பி. இளைஞா் சபீரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com