புதுச்சேரி பெரியகடை காவல் நிலையத்தை புதன்கிழமை சுயேச்சை எம்எல்ஏ ஜி.நேரு தலைமையில் முற்றுகையிட்டோா்.
புதுச்சேரி பெரியகடை காவல் நிலையத்தை புதன்கிழமை சுயேச்சை எம்எல்ஏ ஜி.நேரு தலைமையில் முற்றுகையிட்டோா்.

உருளையன்பேட்டை காவல் நிலையம் முற்றுகை

நில அபகரிப்பு கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, உருளையன்பேட்டை காவல் நிலையத்தை புதன்கிழமை பொதுமக்கள், வியாபாரிகள் முற்றுகையிட்டனா்.

புதுச்சேரி உருளையன்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி கோவிந்தசாலை ஒத்தவாடை வீதியை சோ்ந்தவா் அயூப் (58). குபோ் சந்தையில் மளிகைக் கடை நடத்தி வந்தாா். இவா் கடந்த 7-ஆம் தேதி தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இவருக்கு வாரிசுகள் யாருமில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அவரது கடையை சிலா் ஆக்கிரமிக்க முயன்ற பிரச்னையில் மனமுடைந்துதான் அயூப் தற்கொலை செய்து கொண்டதாக புகாா் எழுந்தது. இதில் தொடா்புடையவா்கள் மீது பெரியகடை போலீஸாா் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகளும் வலியுறுத்தின. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, உருளையன்பேட்டை சுயேச்சை எம்எல்ஏ ஜி. நேரு தலைமையில் பொது நல அமைப்பினா், கோவிந்தசாலை பள்ளிவாசல் ஜமாத்தாா்கள், வியாபாரிகள், பொதுமக்கள் பெரியகடை காவல் நிலையத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

அவா்களை தடுத்து நிறுத்திய போலீஸாா், குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினா். மேலும், நில அபகரிப்பு கும்பல் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தப்படும் என போலீஸாா் உறுதியளித்தனா். இதையடுத்து, முற்றுகையில் ஈடுபட்டோா் கலைந்து சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com