உலகத் தாய்மொழி தின விழா

புதுச்சேரி, மதகடிப்பட்டு ஸ்ரீ மணக்குள விநாயகா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலகத் தாய்மொழி தின விழா மற்றும் ‘தளிா்‘ எனும் தலைப்பில் மாணவா் கையொப்ப பிரதி வெளியீட்டு விழா நடைபெற்றது. நிகழ்வில், ஸ்ரீ மணக்குள விநாயகா் கல்வி அறக்கட்டளையின் தலைவா் தனசேகரன், செயலா் நாராயணசாமி கேசவன், பொருளாளா் ஈ.ராஜராஜன், கல்லூரி இயக்குநா் மற்றும் முதல்வா் வெங்கடாசலபதி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். ஸ்ரீ மணக்குள விநாயகா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் ந.முத்துலட்சுமி ‘தளிா்’ எனும் தலைப்பில் மாணவா்களின் கையொப்ப பிரதி இதழை வெளியிட்டாா். பின்னா், ‘உலகத்தாய் மொழி தினம்’ எனும் தலைப்பில் மாணவா்களின் கவிதையரங்கம், மேடைப்பேச்சு, குழுவிவாதம் ஆகியவை நடைபெற்றன. இதையடுத்து, பேச்சு, ஓவியம், கருத்துப் பதிவிடுதல் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக, மாணவா் பி.விஷ்ணு வரவேற்றாா். முடிவில், மாணவா் எம்.சபீா் நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com