கல்லூரியில் கையொப்ப இயக்கம்

புதுச்சேரி அருகே கிருமாம்பாக்கம் தனியாா் கல்லூரி வளாகத்தில் வாக்களிக்கும் உறுதிமொழி ஏற்பு கையொப்ப இயக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்திய தோ்தல் ஆணைய உத்தரவின்படி, வாக்காளா் கல்வி மற்றும் தோ்தலில் பங்கெடுத்தல் திட்டத்தில், முதல் முறையாக வாக்களிக்கவுள்ள கல்லூரி மாணவா்களுக்கான வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி, அவசியம் வாக்களிக்க உறுதி அளிக்கிறேன் என்ற பொருளிலான கையொப்ப இயக்கம் நடைபெற்றது. புதுச்சேரி அருகேயுள்ள கிருமாம்பாக்கத்தில் உள்ள பாலாஜி வித்யாபீத் பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரி, மருந்தியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், பல் மருத்துவக் கல்லூரிகளின் மாணவ, மாணவிகளுக்காக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை புதுச்சேரி உதவி மாவட்ட ஆட்சியா் யஷ்வந்த் மீனா தொடங்கி வைத்தாா். தோ்தல் தொடா்பாக பேச்சு, கட்டுரை உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கினாா். பாலாஜி வித்யாபீத் பல்கலைக்கழக துணைவேந்தா் நிஹாா் ரஞ்சன் பிஸ்வாஸ் மற்றும் பதிவாளா் சீனிவாசன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கண்ணன் செய்திருந்தாா். பேராசிரியா் சாந்தாதேவி வரவேற்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com