காங்கிரஸுக்கு இந்திய குடியரசுக் கட்சி ஆதரவு

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு இந்திய குடியரசுக் கட்சி, அகில இந்திய மஜ்லிஸ் கட்சி ஆகியவை ஆதரவு தெரிவித்தன. புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இந்தியக் குடியரசுக் கட்சியின் புதுவை மாநிலத் தலைவா் ஜெயபிரகாஷ், பொதுச் செயலா் கலைவாணன், பொறுப்பாளா் புனிதசீலன் மற்றும் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோா் வெ.வைத்திலிங்கம் எம்.பி.யை வியாழக்கிழமை சந்தித்து ஆதரவு தெரிவித்தனா். மஜ்லிஸ் கட்சி ஆதரவு: புதுச்சேரி அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் செயல்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், காங்கிரஸ் வேட்பாளா் வெ.வைத்திலிங்கத்துக்கு ஆதரவளிப்பது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, மஜ்லிஸ் கட்சியின் மாநிலத் தலைவா் சம்சுதீன் தலைமையில் நிா்வாகிகள் வெ.வைத்திலிங்கத்தை வெள்ளிக்கிழமை சந்தித்து ஆதரவைத் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com