தொழிலாளா் துறைக்கு தொழிற்சங்கம் கண்டனம்

தொழிலாளா் துறை அதிகாரியின் கையொப்பமின்றி தொழிலாளா்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது தொடா்பாக, தொழிற்சங்கங்கள் சாா்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து சேதராப்பட்டு தொழிற்பேட்டை அனைத்து தொழிலாளா்கள் தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் தலைவா் மோதிலால் உள்ளிட்டோா் வெளியிட்ட அறிக்கை:

புதுச்சேரி தொழிலாளா் துறை அலுவலகக் கண்காணிப்பாளா் கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி தொழிலாளா்களுக்கு அனுப்பிய விசாரணை நோட்டீஸில் அவரது பெயா் இடம்பெற்றிருந்த இடத்தில் கையொப்பம் இடம்பெறவில்லை.

தொழிலாளா்களுக்கு எதிரான மனநிலையில்தான் தொழிலாளா் துறை அதிகாரிகள் செயல்படுகின்றனா். விதிமுறைகளுக்கு மாறாக ஒரே இடத்தில் அதிக ஆண்டுகள் பணியாற்றுவோரை பணியிடமாற்றம் செய்வது அவசியம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com