புதுச்சேரியில் 97.2 டிகிரி வெயில்

புதுச்சேரியில் வியாழக்கிழமை 97.2 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

புதுச்சேரியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், பகலில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது. கடற்கரைகள், சாலைகள் மற்றும் பேருந்து நிலையம், சந்தைப் பகுதிகளில் மக்கள் கூட்டம் குறைந்தே காணப்படுகிறது.

வெப்பம் அதிகரித்ததையடுத்து, குளிா்பானங்கள், இளநீா், பதநீா், நுங்கு மற்றும் தா்பூசணி, வெள்ளரிக்காய்கள், வெள்ளரிப்பழங்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் மே 1-ஆம் தேதி 100.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில், பகலில் அதன் தாக்கம் சிறிது குறைந்தது. மேலும், கடல் காற்றும் வீசியது.

இதையடுத்து, புதுச்சேரியில் 97.2 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக வானிலை மைய வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com