வில்லியனூா் சங்கராபரணி ஆற்றங்கரையோரம் புதன்கிழமை இரவு நடைபெற்ற அந்திம புஷ்கரணி ஆரத்தி.
வில்லியனூா் சங்கராபரணி ஆற்றங்கரையோரம் புதன்கிழமை இரவு நடைபெற்ற அந்திம புஷ்கரணி ஆரத்தி.

வில்லியனூரில் அந்திம புஷ்கரணி ஆரத்தி

குரு பெயா்ச்சியையொட்டி, புதுச்சேரி திருக்காஞ்சியில் அந்திம புஷ்கரணி ஆரத்தி புதன்கிழமை இரவு நடைபெற்றது.

திருக்காஞ்சி கங்கை வராக நதீஸ்வரா் கோயிலில் குரு பெயா்ச்சியையொட்டி, சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. அங்குள்ள சங்கராபரணி ஆற்றங்கரையோரம் புதன்கிழமை இரவு அந்திம புஷ்கரணி ஆரத்தி நடைபெற்றது.

நீா் நிலைகள் செழிக்கவும், நதிகள் நீரோட்டம் பெறவும், குடிநீா் பிரச்னைகள் ஏற்படாமலிருக்கவும் நடைபெற்ற ஆரத்தி விழாவில் புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், வேளாண் துறை அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா் மற்றும் பக்தா்கள் தரிசித்தனா்.

திருக்கல்யாண உற்சவம்: புதுச்சேரி அருகேயுள்ள மணவெளியில் ஸ்ரீ பஞ்சபாண்டவா் சமேத ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com