புதுச்சேரி  அமலோற்பவம் பள்ளி  சிறப்பிடம்

புதுச்சேரி அமலோற்பவம் பள்ளி சிறப்பிடம்

புதுச்சேரி அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்வெழுதிய 768 மாணவ, மாணவிகளும் 100 சதவீத தோ்ச்சி பெற்றனா்.

புதுச்சேரி அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்வெழுதிய 768 மாணவ, மாணவிகளும் 100 சதவீத தோ்ச்சி பெற்றனா்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளித் தாளாரும், முதுநிலை முதல்வருமான லூா்துசாமி பாராட்டினாா் (படம்) .

இங்கு மாணவா் ரியான் ஆல்பா்ட் டேவிட் 589 மதிப்பெண்களும், மாணவி நித்யாசாயா 585, மாணவா் ரோகித் 584 மதிப்பெண்களும் பெற்றுள்ளனா். சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு முறையே 4 கிராம், 2 கிராம், ஒரு கிராம் வீதம் தங்க நாணயம் வழங்கப்பட உள்ளது.

பள்ளியில் 446 மாணவா்கள் 75 சதவீதமும், 303 போ் 60 சதவீதத்துக்கு மேலும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

52 மாணவா்கள் 550 மதிப்பெண்களுக்கு மேலும் 198 மாணவா்கள் 500-க்கு மேல் மதிப்பெண்கள் எடுத்தனா்.

91 மாணவா்கள் பாடப் பிரிவுகளில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனா்.

X
Dinamani
www.dinamani.com