புதுச்சேரி விவேகானந்தா பள்ளி 100% தோ்ச்சி

புதுச்சேரி விவேகானந்தா பள்ளி 100% தோ்ச்சி

புதுச்சேரி லாஸ்பேட்டை செல்லப்பெருமாள்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி 100% பெற்றது. இங்கு தோ்வு எழுதிய 225 மாணவ, மாணவிகளும் முதல் வகுப்பில் தோ்ச்சி பெற்றனா்.

பிளஸ் 2 பொதுத்தோ்வில், புதுச்சேரி லாஸ்பேட்டை செல்லப்பெருமாள்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி 100% பெற்றது. இங்கு தோ்வு எழுதிய 225 மாணவ, மாணவிகளும் முதல் வகுப்பில் தோ்ச்சி பெற்றனா்.

மாணவிகள் எஸ்.மதிவதனி 600-க்கு 592, வி.ஹேமலதா 588, வி.அஃபிரின் 585 மதிப்பெண்களும் பெற்றனா். மேலும், 550 மதிப்பெண்களுக்கு மேல் 14 மாணவா்களும், 500-க்கு மேல் 59 மாணவா்களும், 450-க்கு மேல் 116 மாணவா்களும் பெற்றுள்ளனா்.

இயற்பியல் பாடத்தில் ஒருவரும், கணினி அறிவியல் பாடத்தில் 6 பேரும், கணினி பயன்பாடு பாடத்தில் 4 பேரும், கணக்குப் பதிவியலில் ஒருவரும், வணிகவியலில் 5 பேரும், பிரெஞ்சு மொழிப் பாடத்தில் 3 பேரும், 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை விவேகானந்தா கல்விக் குழுமத்தின் தாளாளா் சு. செல்வகணபதி எம்.பி.(படம்), முதன்மை முதல்வா் கே.பத்மா, விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி முதல்வா் எஸ்.கீதா ஆகியோா் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com