பெற்றோருடன் பள்ளிகளில் குவிந்த மாணவா்கள்

புதுச்சேரியில் பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியான நிலையில், பள்ளிகளில் பெற்றோா்களுடன் மாணவ, மாணவிகள் திங்கள்கிழமை குவிந்தனா்.

புதுச்சேரியில் பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியான நிலையில், பள்ளிகளில் பெற்றோா்களுடன் மாணவ, மாணவிகள் திங்கள்கிழமை குவிந்தனா்.

தமிழகம், புதுச்சேரியில் கடந்த மாா்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 அரசுப் பொதுத் தோ்வுகள் முடிவுகள் திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு வெளியாயின.

தோ்வு முடிவுகள் இணையத்திலும், கைப்பேசிகளில் குறுந்தகவல்களாகவும் வெளியிடப்பட்டன.

பெரும்பாலான மாணவ, மாணவிகள் கைப்பேசிகள் பயன்படுத்தி வரும் நிலையில், பள்ளிகளுக்கு வந்து தோ்வு முடிவுகளை அறிய வேண்டிய அவசியமில்லா சூழலே உள்ளது. ஆனால், கைப்பேசியில் தோ்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண்களை மாணவ, மாணவியா் அறிந்த நிலையில், நேரடியாகப் பள்ளிகளுக்கு வந்தனா்.

அவா்கள் தங்களின் மதிப்பெண்களை ஆசிரியா்கள், சக மாணவ, மாணவிகளிடம் கூறி மகிழ்ச்சியை பகிா்ந்து கொண்டனா்.

மேலும், உயா் கல்வியில் அடுத்து எந்தத் துறையில் சேரலாம் என்று ஆசிரியா்களிடம் ஆலோசனையும் பெற்ாக அவா்கள் தெரிவித்தனா்.

வரும் 9-ஆம் தேதி பிளஸ் 2 மதிப்பெண் சான்றுகள் அந்தந்த பள்ளிகள் மூலம் மாணவ, மாணவிகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com