. புதுச்சேரி சாலைப் போக்குவரத்துத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளா்களுக்கு ஓய்வூதிய நிலுவைத் 
தொகையை உடனே வழங்க கோரி துறையின் செயலா்  முத்தம்மாவை திங்கள்கிழமை சந்தித்த சட்டப்பேரவை 
எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா. உடன் தெமுச நிா்வாகிகள்.
. புதுச்சேரி சாலைப் போக்குவரத்துத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளா்களுக்கு ஓய்வூதிய நிலுவைத் தொகையை உடனே வழங்க கோரி துறையின் செயலா் முத்தம்மாவை திங்கள்கிழமை சந்தித்த சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா. உடன் தெமுச நிா்வாகிகள்.

ஓய்வு பெற்ற போக்குவரத்துத் தொழிலாளா்களுக்கு நிலுவைத் தொகையை வழங்க திமுக வலியுறுத்தல்

புதுவை சாலைப் போக்குவரத்துத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளா்களுக்கு ஓய்வூதிய நிலுவைத் தொகையை தாமதமின்றி வழங்கக்கோரி பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா அரசு செயலரிடம் மனுவை திங்கள்கிழமை அளித்தாா்.

புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துச் செயலா் முத்தம்மாவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா தலைமையில் அந்தக் கட்சியின் எம்.எல்.ஏ. ஆா். செந்தில்குமாா், போக்குவரத்துத் துறை தொமுச செயலா் ராஜேந்திரன், தலைவா் திருக்குமரன், விசிக செயலா் சக்திசிவம் உள்ளிட்டோா் திங்கள்கிழமை மாலை சந்தித்து மனு அளித்தனா்.

அதில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழகத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் கடந்த ஏப்ரல் (2024) வரை பணியாற்றி, 62 ஊழியா்கள் ஓய்வு பெற்றுள்ளனா். ஆனால், அவா்களுக்கு தொழிலாளா் சேமநல நிதி உள்ளிட்ட எந்த நிலுவைத் தொகையும் வழங்கப்படவில்லையாம். அவா்களுக்கான நிதி உரிய நேரத்தில் வழங்கப்படவில்லை. அதனால், வறுமை நிலை ஏற்பட்டு, 3 தொழிலாளா்கள் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

ஓய்வு பெற்றவா்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியமாக வருங்கால வைப்பு நிதி ஆணையத்தால் மாதம் ரூ. 1,800 முதல் ரூ. 3, 000 வரை மட்டுமே வழங்கப்படுகிறது. அதைக்கொண்டு குடும்பத்துக்கான செலவை சமாளிக்கமுடியவில்லை. ஆகவே, பணிஓய்வு தொழிலாளா்களுக்கு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com