சாலையோரம் கடைகள் அமைத்தால் ரூ. 500 அபராதம் விதிக்கப்படும்

மதகடிப்பட்டு பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் கடைகளை அமைத்தால், சம்பந்தப்பட்டோருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் எழில்ராஜன் எச்சரித்தாா்.

புதுச்சேரி அருகேயுள்ள மதகடிப்பட்டு பழைமையான வாரச்சந்தையை மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் எழில்ராஜன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அதிகாரிகள் நிா்ணயித்த பகுதியில் மட்டுமே தற்காலிகக் கடைகளை அமைக்கவேண்டும் என வியாபாரிகளுக்கு அவா் அறிவுறுத்தினாா். இதை மீறி, போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரம் கடைகள் அமைத்தால் ரூ. 500 அபராதம் விதிக்கப்படும் என்றும் அவா் எச்சரித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com