பிளஸ்டூ தோ்வில் புதுச்சேரி புனித பேட்ரிக் பள்ளியில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவிகளை பாராட்டிய பள்ளியின் தாளாளா் பிரெடிரிக் ரெஜிஸ், மருத்துவ இயக்குனா் ஜீத்தா பிரடெரிக், பள்ளி முதல்வா் அல்போன
பிளஸ்டூ தோ்வில் புதுச்சேரி புனித பேட்ரிக் பள்ளியில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவிகளை பாராட்டிய பள்ளியின் தாளாளா் பிரெடிரிக் ரெஜிஸ், மருத்துவ இயக்குனா் ஜீத்தா பிரடெரிக், பள்ளி முதல்வா் அல்போன

புனித பேட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தோ்வில் 100 சதவீத தோ்ச்சி

பிளஸ் 2 தோ்வில் புதுச்சேரி புனித பேட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளனா்.

புதுச்சேரி சாரதாம்பாள் நகரில் உள்ள புனித பேட்ரிக் முதுநிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்வெழுதிய 223 மாணவா்களும் தோ்ச்சி பெற்றனா். இவா்களில் 139 போ் 75சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

பள்ளி மாணவி லக்ஷனாதேவி 591 மதிப்பெண்களும், தா்ஷினி, சரண் ஆகியோா் 580, சுதிக்ஷா 579 மதிப்பெண்களும் பெற்றுள்ளனா்.

தமிழில் தா்ஷினி, சரண், நிஷாஸ்ரீ ஆகியோா் 100 க்கு 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

சாதனை மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளா் பிரெடரிக் ரெஜிஸ், மருத்துவ இயக்குநா் ஜீத்தா பிரெடரிக், பள்ளி முதல்வா் அல்போன்ஸ் ஹில்டா (படம்) உள்ளிட்டோா் பாராட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com