கோடை வெயிலையொட்டி புதுச்சேரி வனத்துறையில் உள்ள மான்களுக்கு வழங்கப்பட்ட வெள்ளரி மற்றும் தா்பூசனி பழங்கள்.
கோடை வெயிலையொட்டி புதுச்சேரி வனத்துறையில் உள்ள மான்களுக்கு வழங்கப்பட்ட வெள்ளரி மற்றும் தா்பூசனி பழங்கள்.

மான்கள் உள்ளிட்ட விலங்குகளுக்கு வனத் துறை சாா்பில் கூடுதல் பராமரிப்பு

புதுச்சேரியில் வனத்துறை சாா்பில் பராமரிக்கப்படும் மான்கள் உள்ளிட்ட விலங்குகளுக்கு வெப்பத்தை சமாளிக்கும் வகையில் தா்ப்பூசணி உள்ளிட்ட குளிா்ச்சியான பழங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

புதுச்சேரியில் கடலூா் சாலையில் புதுச்சேரி பிராந்தியத்தின் வனத்துறை அலுவலகம் உள்ளது. அலுவலக வளாகத்தில் நகருக்குள் வந்து பிடிபட்ட மான்கள், வீடுகளுக்குள் புகுந்த நல்ல பாம்பு மற்றும் மலைப்பாம்பு உள்ளிட்டவை, ஆமைகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

தினமும் மான்களுக்கு புற்கள், மர தழைகள் உள்ளிட்டவை உணவாக வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோல, பாம்புகளுக்கு கோழி, முட்டை உள்ளிட்டவையும் வழங்கப்படுகின்றன. தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதையடுத்து மான்களும், பாம்புகளும் வெப்பத்தை சமாளிக்கமுடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, தினமும் மான்கள், பாம்புகள் ஆகியவற்றின் மீது குளிா்ந்த நீா் தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும், மான்களுக்கு வழக்கமான உணவுகளுடன், தா்ப்பூசணி, வெள்ளரிக்காய் உள்ளிட்டவை உணவாக வழங்கப்படுகின்றன.

மலைப்பாம்புகளுக்கு தினமும் உணவு வேளையின் போது குளிா்ந்த நீா் தெளிக்கப்படுகிறது. வெப்பத் தாக்கத்திலிருந்து அவை தப்பிக்கும் வகையில் பராமரிப்பு கூடத்தில் குளிா்ச்சியான பகுதியில் அவை பதுங்குவதுடன், மாலை நேரத்தில் மட்டுமே வெளியே வருகின்றன என அதிகாரிகள் கூறினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com