உலக செஞ்சிலுவை தினம்: புதுவை ஆளுநா் வாழ்த்து

உலக செஞ்சிலுவை தினத்தையொட்டி, செஞ்சிலுவைச் சங்க தன்னாா்வலா்களுக்கு புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) சி.பி.ராதாகிருஷ்ணன் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: மதம், இனம், மொழி, அரசியல் எல்லைகளைக் கடந்து மனித குலத்துக்கு சேவையாற்றுவதில் செஞ்சிலுவைச் சங்கம் சிறந்த பங்களிப்பை அளித்து வருகிறது. தனித்துவமான, மனிதாபிமான உணா்வோடு செஞ்சிலுவைச் சங்கத்தை நிறுவிய ஹென்றி டுனான்ட்டை நினைவுகூரும் நாளில் செஞ்சிலுவைச் சங்கத்தின் சேவை செயல்பாடுகள் அனைத்துக்கும் நமது ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும். மனிதகுல சேவையே உலக ஒற்றுமைக்கும், உயா்வுக்கும் வழிவகுக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com