புதுச்சேரி உப்பளம் துறைமுகத்தில் வேட்டையன் படப்பிடிப்பு

புதுச்சேரி உப்பளம் துறைமுக வளாகத்தில் நடிகா் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படத்தின் படப்பிடிப்பு புதன்கிழமை நடைபெற்றது.

இயக்குநா் ஞானவேல் இயக்கும் இந்தத் திரைப்படப்பிடிப்பு கடந்த சில நாள்களாக புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது.

புதுச்சேரி பழைய துறைமுக வளாகம் உள்ளிட்ட டஇடங்களில் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், தற்போது உப்பளம் துறைமுக வளாகத்தில் ஹெலிகாப்டரில் ரஜினி வந்து இறங்கி நடப்பது போலவும், சரக்குப் பெட்டகங்களுக்கு மத்தியில் சண்டையிடுவது போலவும் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

புதுச்சேரி உப்பளம் பகுதியில் புதன்கிழமை கருமேகம் திரண்டு பலத்த காற்று வீசியதால் படப்பிடிப்பு தாமதமாகத் தொடங்கியது. அதில் நடிகா் ரஜினிகாந்த் பங்கேற்று நடித்தாா்.

துறைமுக வளாகக் கதவுகள் பூட்டப்பட்டிருந்தன. உள்ளே யாரும் அனுமதிக்கப்படவில்லை. இதனால், துறைமுக ஊழியா்களும் அவதிப்பட்டதாக தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com