போா் வீரா்கள் நினைவுத் தூணில் ஆட்சியா் மரியாதை

இரண்டாம் உலகப் போரில் உயிரிழந்த வீரா்களுக்கான நினைவுத் தூணில் புதுச்சேரி ஆட்சியா் அ.குலோத்துங்கன் புதன்கிழமை மாலை மரியாதை செலுத்தினாா்.

இரண்டாம் உலகப்போா் நினைவு நாள் மே 8-ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள போா் வீரா்கள் நினைவுத் தூணில் புதுவை அரசு சாா்பில் ஆட்சியா் அ.குலோத்துங்கன் தலைமையில் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில், பிரான்ஸ் அரசு சாா்பில் புதுவைக்கான பிரான்ஸ் நாட்டுத் துணைத் தூதா் ழான் பிலிப் உத்தா் உள்ளிட்டோரும் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா். இரண்டாம் உலகப்போரின் போது, உயிா்நீத்த வீரா்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்தியா, பிரான்ஸ் நாட்டின் தேசியக் கீதங்கள் இசைக்கப்பட்டு, மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com