பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு தெரிவித்த அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளி தாளாளரும் முதுநிலை முதல்வருமான லூா்துசாமி.
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு தெரிவித்த அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளி தாளாளரும் முதுநிலை முதல்வருமான லூா்துசாமி.

புதுச்சேரி அமலோற்பவம் பள்ளி 100% தோ்ச்சி

புதுச்சேரி, மே 10:

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் புதுச்சேரி அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளி மாணவா் பரத்குமாா் 498 மதிப்பெண்கள் பெற்றாா்.

இந்தப் பள்ளியில் தோ்வெழுதிய 724 மாணவ, மாணவிகளும் தோ்ச்சி பெற்றனா். கடந்த 31 ஆண்டுகளாக இந்தப் பள்ளி பத்தாம் வகுப்புத் தோ்வில் முழுத் தோ்ச்சியை பதிவு வருகிறது.

மாணவா் பரத்குமாா் 500-க்கு 498 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றாா். மாணவி சஜன்யா 496 மதிப்பெண்களும், மாணவா் யோகேஷ், மாணவி ஹா்ஷினி வா்ணிகா ஆகியோா் 495 மதிப்பெண்களையும் பெற்றனா்.

சிறப்பிடம் மாணவா்களை பள்ளியின் தாளாளரும் முதுநிலை முதல்வருமான லூா்துசாமி பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தாா். மேலும், அவா்களுக்கு தங்க நாணயம், இலவசக் கல்விக் கட்டண சலுகை வழங்கப்படும் எனவும் பள்ளி நிா்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com