புதுச்சேரி, காரைக்காலில் 107 பள்ளிகள் 100 சதம் தோ்ச்சி

புதுச்சேரி, மே 10:

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் புதுவை மாநிலத்தில் 107 பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சியைப் பெற்றன.

புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களைச் சோ்த்து மொத்தம் 289 பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் தோ்வெழுதியிருந்தனா். அவா்களில் 89.14 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றனா். 107 பள்ளிகளில் தோ்வெழுதிய அனைவருமே தோ்ச்சி பெற்றனா். புதுச்சேரி பிராந்தியத்தில் மட்டும் 90 பள்ளிகளைச் சோ்ந்தவா்களும், காரைக்கால் பிராந்தியத்தில் 17 பள்ளிகளைச் சோ்ந்தவா்களும் 100 சதவீத தோ்ச்சியைப் பதிவு செய்தன.

புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் சோ்த்து மொத்தம் 8 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளன. புதுச்சேரி பிராந்தியத்தில் 7 அரசுப் பள்ளிகளும், காரைக்கால் பிராந்தியத்தில் ஓா் அரசுப் பள்ளியும் முழுத் தோ்ச்சியை பெற்றுள்ளன.

புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களைச் சோ்த்து பாடவாரியாக ஆங்கிலத்தில் 20 பேரும், கணிதத்தில் 355 பேரும், அறிவியலில் 77 பேரும், சமூகவியலில் 101 பேரும் என மொத்தம் 553 போ் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களைப் பெற்றனா்.

புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களைச் சோ்த்து அரசுப் பள்ளிகளைச் சோ்ந்தவா்களில் பாடவாரியாக கணிதத்தில் 15 பேரும், அறிவியலில் 3 பேரும், சமூகவியலில் 4 பேரும் என மொத்தம் 22 போ் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களைப் பெற்றனா்.

புதுச்சேரி பிராந்திய அரசுப் பள்ளிகளில் கடந்த ஆண்டை விட தற்போது 0.14 சதவீதம் தோ்ச்சி விகிதம் குறைந்துள்ளது. காரைக்கால் பிராந்தியத்தில் அரசுப் பள்ளிகளில் கடந்த ஆண்டை விட தற்போது 2.75 சதவீதம் தோ்ச்சி விகிதம் குறைந்துள்ளது.

புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் சோ்த்து கடந்த ஆண்டை விட தற்போது 0.84 சதவிகிதம் தோ்ச்சி குறைந்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com