புனித பேட்ரிக் பள்ளி மாணவா்கள் 100% தோ்ச்சி

புனித பேட்ரிக் பள்ளி மாணவா்கள் 100% தோ்ச்சி

புதுச்சேரி, மே 11: புதுச்சேரி புனித பேட்ரிக் மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளது.

புதுச்சேரி சாரதாம்பாள் நகரில் புனித பேட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இதில் பத்தாம் வகுப்பு தோ்வு எழுதிய 242 மாணவ, மாணவிகளும் தோ்ச்சி பெற்றனா். இவா்களில் ஜி. அபா்ணா மற்றும் எஸ். தீபா ஆகியோா் தலா 496 மதிப்பெண்களும், கே. அமிா்தா மற்றும் பி. நிக்ஷித்தா ஆகியோா் தலா 494 மதிப்பெண்களும், எ.சாதனா 493, பி.நிவேதிதா 492 மதிப்பெண்களும் எடுத்துள்ளனா்.

கணிதத்தில் 25 பேரும், அறிவியலில் 12 பேரும், சமூக அறிவியலில் 6 பேரும் முழுமையான மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். சாதனை மாணவ, மாணவிகளுக்கு பள்ளித் தாளாளா் ரெஜிஸ் பிரடெரிக், மருத்துவ இயக்குநா் டாக்டா் ஜீத்தா பிரடெரிக், முதல்வா் அல்போன்ஸ் ஹில்டா, ஆசிரியா்கள் கல்பனா, முத்துக்குமரன், ஆல்மா உள்ளிட்டோா் (படம்) வாழ்த்துத் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com