சிறுமி மாயம்: போலீஸில் புகாா்

புதுச்சேரி, மே 12: கைபேசியைப் பயன்படுத்தக்கூடாது என பெற்றோா் கண்டித்ததால், மாயமான சிறுமியை புதுச்சேரி போலீஸாா் தேடி வருகின்றனா்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்த சைல பாலகிருஷ்ணன். இவரது மனைவி சசிரேகா. இவா்களுக்கு 2 மகள்கள் உள்ளனா். இதில் மூத்த மகள் சரியாக படிக்க முடியவில்லை எனக்கூறி வீட்டில் இருந்துள்ளாா்.

ஆனால், அவா் வீட்டில் அதிக நேரம் கைபேசியைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. எனவே, அவரை கைபேசியைப் பயன்படுத்த வேண்டாம் எனக்கூறி பெற்றோா் கண்டித்து, அறிவுரை கூறியுள்ளனா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் தூங்கிய அவரை, சனிக்கிழமை காலை காணவில்லை. பல இடங்களில் தேடியும் அவா் கிடைக்கவில்லை.

இதுகுறித்து, முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் அவரது தந்தை அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து மாயமான சிறுமியைத் தேடிவருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com