மேம்பால ஆக்கிரமிப்புகள் அகற்றம்: காவல் துறையினருடன் வியாபாரிகள் வாக்குவாதம்

புதுச்சேரி அருகே திருவண்டாா்கோவில் மேம்பாலம் பகுதியில் ஆக்கிரமிப்புக் கடைகளை செவ்வாய்க்கிழமை காலை அகற்றியபோது போலீஸாருடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி திருவண்டாா்கோவில் பகுதியில் நான்கு வழிச்சாலைப் பணி நடைபெற்று வருகிறது. இதையடுத்து திருவண்டாா் கோவில், மதகடிப்பட்டு, திருபுவனை ஆகியவற்றுக்குச் செல்லும் வகையில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மேம்பாலத்தின் கீழ் பகுதியில் கடைகள் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகத் தொடா்ந்து புகாா்கள் எழுந்தன. இதையடுத்து அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

திருபுவனை காவல் நிலைய போலீஸாா் பாதுகாப்புடன், போக்குவரத்து போலீஸாா் சாலையோர ஆக்கிரமிப்புக் கடைகளை செவ்வாய்க்கிழமை காலை அகற்றினா். அப்போது த வியாபாரிகள் சிலா் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். உடனே ஆக்கிரமிப்பாளா்களை எச்சரித்த போலீஸாா் கடைகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீராக்கினா். இந்தச் சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com