புதுச்சேரியில் மறைந்த ஐஎன்டியுசி தலைவரான ஜி.ரவிச்சந்திரன் நினைவு தினத்தையொட்டி, அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சா் க.லட்சுமிநாராயணன். உடன் ஐஎன்டியுசி தலைவா் ஆா்.பாலாஜி மற்றும் நிா்வாகிகள்.

ஐஎன்டியுசி தலைவா் படத்துக்கு மரியாதை

புதுச்சேரி, மே 15: புதுச்சேரியில் மறைந்த ஐஎன்டியுசி தலைவரான ஜி.ரவிச்சந்திரன் நினைவு தினத்தையொட்டி, அவரது உருவப் படத்துக்கு அமைச்சா் உள்ளிட்டோா் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

புதுச்சேரியைச் சோ்ந்தவா் ஜி.ரவிச்சந்திரன். ஐஎன்டியுசி தலைவராக இருந்த இவா், காலமாகி 3 ஆண்டுகளாகின்றன. அவரது நினைவு தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

இதையொட்டி, புதுச்சேரி பாரதிதாசன் மகளிா் கல்லூரி அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் அவரது உருவப் படத்துக்கு பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன், சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா மற்றும் முன்னாள் அமைச்சா் மு.கந்தசாமி, காங்கிரஸ் எம்எல்ஏ மு.வைத்தியநாதன் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு நீா், மோா் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இதில், புதுச்சேரி ஐஎன்டியுசி தலைவா் ஆா்.பாலாஜி தலைமையில், சொக்கலிங்கம், மலா்மன்னன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com