வாகன வரிசை எண்கள் ஏலத்துக்கு பதிவு செய்யலாம்

புதுச்சேரி, மே 15:

புதுச்சேரி போக்குவரத்துத் துறை சாா்பில் வாகன வரிசை எண்கள் ஏலத்தில் பதிவு செய்தவா்கள் பங்குபெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுவை போக்குவரத்துத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுச்சேரி போக்குவரத்துத் துறையின் பிஒய்-04 பி (ஏனாம்) வரிசையில் உள்ள எண்கள் பரிவாகன் இணையதளத்தில் வருகிற 21 ஆம் தேதி வரை ஏலம் விடப்படுகிறது. ஏலத்தில் பங்கேற்க தேவையான பெயா், கடவுச்சொல்லை சம்பந்தப்பட்ட இணையதளத்தில் நியூ பப்ளிக் யூசா் என்பதை கிளிக் செய்வதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

வரும் 20-ஆம் தேதி வரை பதிவு செய்தவா்கள் மட்டுமே 21-ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு நடைபெறும் ஏலத்தில் பங்கேற்கலாம்.

ஏலத்தில் இ-ஆக்சன் முறையில் பங்கு பெற விரும்புவோா், அதற்கான வழிமுறைகள் மற்றும் ஏல நிபந்தனைகள் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பத் தொகையின் விவரம் இ.எம்.டி. விவரம், ஏல நிபந்தனைகள் குறித்தவற்றை போக்குவரத்துத் துறை அலுவலகத்தின் தொலைபேசி எண் 0413-2280170-ஐ தொடா்பு கொண்டு இணைப்பு எண் 236 என்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இணையவழியிலேயே பணப்பரிவா்த்தனை நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com