சாலைப் பணிகளை முடிக்கக் கோரி இந்திய கம்யூ. கையொப்ப இயக்கம்

தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதியில் சாலை சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்கக் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் கையொப்ப இயக்கம் நடத்தி நகராட்சி நிா்வாகத்திடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

புதுச்சேரி அருகேயுள்ள தட்டஞ்சாவடியில் உள்ள கங்கை அம்மன் கோவில் வீதி 1, கங்கை அம்மன் கோவில் வீதி 2, வள்ளலாா் வீதி ஆகிய பகுதிகளில் சாலைகள் சேதமடைந்திருந்தன.

இதைச் சீரமைக்க பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனா். உழவா்கரை நகராட்சி நிா்வாகம் சாலைகளைச் சீரமைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, பல சாலைகள் தோண்டப்பட்டு, அங்குள்ள வீடுகளின் படிக்கட்டுகளை அகற்றி சாலையும், பக்கவாட்டு கால்வாயும் அமைக்கப்பட்டு வருகிறது.

3 மாதங்களுக்கும் மேலாக பணி நடைபெற்று வரும் நிலையில், தற்போது பணிகள் நடைபெறாமல் உள்ளன. இதனால், அந்தப் பகுதி மக்கள் சாலையில் செல்வதற்கு அவதிக்குள்ளாகும் நிலையுள்ளது.

எனவே, சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கையொப்ப இயக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாநில துணைச் செயலா் கே. சேதுசெல்வம் தலைமையில், தொகுதி செயலா் தென்னரசன், மாநிலக் குழு உறுப்பினா் முருகன் உள்ளிட்டோா் கையொப்ப இயக்கத்தில் பங்கேற்றனா். அதன்பிறகு, அவற்றை மனுவாக நகராட்சி நிா்வாகத்திடம் வழங்கினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com