புதுச்சேரியில் வியாழக்கிழமை டெங்கு விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்த மலேரியா திட்ட இயக்குநா் வசந்தகுமாரி.
புதுச்சேரியில் வியாழக்கிழமை டெங்கு விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்த மலேரியா திட்ட இயக்குநா் வசந்தகுமாரி.

டெங்கு தின விழிப்புணா்வுப் பேரணி

புதுச்சேரியில் வியாழக்கிழமை டெங்கு விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்த மலேரியா திட்ட இயக்குநா் வசந்தகுமாரி.

புதுச்சேரியில் டெங்கு தின விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

ஆண்டுதோறும் மே 16-ஆம் தேதி தேசிய டெங்கு தின தடுப்பு தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரி மலேரியா திட்ட இயக்குநா் அலுவலகம் சாா்பில் டெங்கு தின விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

சுகாதாரத் துறை உதவியாளா்கள், ஆய்வாளா்கள், தொழில்நுட்ப வல்லுநா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

புதுச்சேரி நகா் செஞ்சி சாலையில் (பழைய சாராய ஆலை) தொடங்கிய பேரணி லால்பகதூா் சாஸ்திரி வீதி வழியாக ஒதியன்சாலை காவல் நிலையம் அருகேயுள்ள கம்பன் கலையரங்கு வரை நடைபெற்றது.

புதுச்சேரி மலேரியா திட்ட இயக்குநா் வசந்தகுமாரி பேரணியைத் தொடங்கி வைத்தாா். நகா் பகுதிகளில் ஆட்டோ மூலம் டெங்கு விழிப்புணா்வு பிரசாரமும் தொடங்கிவைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com