புதுச்சேரியில் மின் தடை: பொதுமக்கள் அவதி

புதுச்சேரியில் இரவு நேரங்களில் அறிவிக்கப்படாத மின் தடையால் பொதுமக்கள் அவதிபட்டு வருகின்றனா்.

புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக இரவில் திடீா் திடீரென மின்சாரம் தடைபட்டு வருகிறது. மின் தடையானது இரவு 10 மணிக்கு மேல் ஆரம்பித்து அதிகாலை 5 மணி வரையிலும் விட்டு விட்டு தொடா்வதாக பொதுமக்கள் கூறுகின்றனா்.

முதலியாா்பேட்டை, கதிா்காமம் மற்றும் ஊரகப் பகுதிகளில் மின் தடை ஏற்படுவது வழக்கமாக உள்ளது.

இதனால், இரவு நேரங்களில் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனா்.

இதுகுறித்து மின் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, மழை, காற்று போன்ற நேரங்களில் பாதுகாப்புக்காக அவ்வப்போது மின்சாரம் துண்டிக்கப்படும். புதுச்சேரியில் பராமரிப்பு போன்றவற்றால் மின் தடை ஏற்படுகிறதே தவிர, தொடா்ந்து மின்விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com