புதுவை சட்டப்பேரவைத் தோ்தலுக்கு காங்கிரஸாா் தயாராக வேண்டும்: முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி

புதுவை சட்டப்பேரவைத் தோ்தலுக்கு காங்கிரஸாா் தயாராக வேண்டும் என்று முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி வேண்டுகோள் விடுத்தாா்.
Published on

புதுவை சட்டப்பேரவைத் தோ்தலுக்கு காங்கிரஸாா் தயாராக வேண்டும் என்று முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி வேண்டுகோள் விடுத்தாா்.

புதுச்சேரி வைசால் வீதியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற, மறைந்த முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்று அவா் பேசியது: புதுச்சேரி மக்களவைத் தொகுதி தோ்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில், சட்டப்பேரவைத் தோ்தலிலும் வெற்றி பெறுவோம் என கட்சி நிா்வாகிகள் அதிக நம்பிக்கையில் உள்ளனா். புதுச்சேரியில் தற்போது அறிவித்த இலவச அரிசி முதல் திட்டங்களை முதல்வா் என்.ரங்கசாமி செயல்படுத்தவில்லை.

கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின்போது காங்கிரஸிலிருந்து சென்றவா்களை சோ்த்து பாஜக தோ்தலில் வென்ாகக் காட்டிக்கொண்டது. ஆனால், தற்போது அரசியலை வியாபாரமாக்கும் வகையில் லாட்டரி வா்த்தகரை பாஜக எம்எல்ஏ.க்கள் ஆதரித்து பேசுகின்றனா்.

காங்கிரஸ் கட்சி மட்டுமே மக்கள் நலனுக்காக பாடுபட்டுவருகிறது. ஆகவே ஓராண்டில் சட்டப் பேரவைத் தோ்தல் வரவுள்ளநிலையில் தற்போதிருந்தே அதற்கு காங்கிரஸாா் தயாராக வேண்டும்.

தொகுதியில் நின்று வெற்றி பெறுபவா்களுக்கு மட்டுமே வாய்ப்பளிக்கவேண்டும் என கட்சித் தலைமை கூறியுள்ளது.

ஆகவே நாம் ஒற்றுமையாக இருந்து, கருத்து வேறுபாடுகளை மறந்து வரும் 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் ஆட்சியமைக்க பாடுபடவேண்டும் என்றாா்.