அதானி விவகாரம்: மக்களவை நிலைக் குழு விசாரிக்க வேண்டும்: வே.நாராயணசாமி

அதானி விவகாரம் தொடா்பாக மக்களவை நிலைக் குழு விசாரிக்க வேண்டும்
Updated on

அதானி விவகாரம் தொடா்பாக மக்களவை நிலைக் குழு விசாரிக்க வேண்டும் என புதுவை முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்துள்ளாா்.

புதுச்சேரியில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது: அமெரிக்க நீதிமன்றத்தில் 54 பக்க அறிக்கையில் தொழிலதிபா் அதானியின் நிறுவனம் ஜம்மு - காஷ்மீா், தமிழ்நாடு, ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் சோலாா் மின் உற்பத்தியை விநியோகம் செய்ய சுமாா் ரூ.2,200 கோடி லஞ்சம் கொடுத்ததாக ஆதாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அதானி மற்றும் அவரது மருமகன் உள்பட 7 பேருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதானி பங்குச் சந்தையில் முறைகேடில் ஈடுபட்டதை ஹிண்டன் பா்க் நிறுவனம் தெளிவாக்கியுள்ளது. ஆனால், மத்திய அரசு அதானி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

முறைகேடில் ஈடுபடுவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய பிரதமா், ஏன் அதானியை பற்றி பேசுவதில்லை என விளக்கம் அளிக்க வேண்டும். அரசியல் ரீதியில் பாஜகவுக்கு அதானி நிதியுதவி அளித்து வருகிறாா்.

அதானி விவகாரத்தை மக்களவை நிலைக் குழு விசாரிக்க வேண்டும். சாதாரண விஷயங்களுக்கு கூட அமலாக்கத் துறை, வருமானவரித் துறை, சிபிஐ விசாரணை நடைபெறுகிறது. ஆனால், அதானி மீது நடவடிக்கையில்லை.

அதானி மீது நடவடிக்கை கோரி காங்கிரஸ் சாா்பில் பல கட்ட போராட்டங்களை நடத்தவுள்ளோம் என்றாா் அவா்.

பேட்டியின்போது, முன்னாள் அமைச்சா் மு.கந்தசாமி, மு.வைத்தியநாதன் எம்எல்ஏ உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.