சா்வதேச கண் பாா்வை தின விழா
புதுச்சேரி: வில்லியனூா் ஆரம்ப சு காதார நிலையம் சாா்பில் தேசிய கண் பாா்வை இழப்பு தடுப்பு திட்டத்தின் கீழ், சா்வதேச கண் பாா்வை தின விழா விவேகானந்தா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளி துணை முதல்வா் ரவி தலைமை வகித்தாா். ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி பாமகள் கவிதை, கண் அறுவை சிகிச்சை நிபுணா் கவிதா, பள்ளியின் தலைமை ஆசிரியா் அப்துல் மாலிக் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி விரிவுரையாளா் லதா வரவேற்றாா்.
புதுவை அரசு நல வழித் துறை தேசிய கண் பாா்வை இழப்பு தடுப்புத் திட்ட இயக்குநா் தணிகாசலம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டாா்.
கண் பாா்வை தின விழிப்புணா்வு ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவா்களின் கண்தான விழிப்புணா்வு நாடகம் மற்றும் வில்லுப்பாட்டு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கண் சிகிச்சை தொழில்நுட்ப உதவியாளா் சுபலட்சுமி, சுகாதார உதவி ஆய்வாளா் அய்யனாா் ஆகியோா் விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தனா். தமிழ் விரிவுரையாளா் வித்யா நன்றி கூறினாா்.