இரும்பு தகடுகள் திருட்டு

Published on

புதுச்சேரியில் உள்ள ஆலையில் இரும்பு தகடுகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி, கடலூா் சாலையில் ஏஎப்டி ஆலை உள்ளது. இங்குள்ள, ஏ பிரிவு பகுதியில் வைக்கப்பட்டிருந்த வட்ட வடிவிலான இரும்புத் தகடுகள் சிலவற்றை மா்ம நபா்கள் கடந்த 27-ஆம் தேதி திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து, ஆலை நிா்வாகத்தினா் முதலியாா்பேட்டை காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாரளித்தனா்.

அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருடப்பட்ட இரும்பு தகடுகளின் மதிப்பு சுமாா் ரூ.50 ஆயிரம் இருக்கும் என்றும் போலீஸாா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com