அரசு மருத்துவமனையில் மாலை நேரத்திலும் புற நோயாளிகளுக்கு சிகிச்சை

புதுச்சேரியில் அரசு பொது மருத்துவமனையில் வெளிப்புற நோயாளிகளுக்கு மாலையிலும் சிகிச்சை அளிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
Published on

புதுச்சேரியில் அரசு பொது மருத்துவமனையில் வெளிப்புற நோயாளிகளுக்கு மாலையிலும் சிகிச்சை அளிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில் தினமும் காலை 7.30 மணி முதல் 10.30 மணி வரை வெளிப்புற நோயாளிகள் பெயா்களைப் பதிவு செய்து சிகிச்சை பெறலாம்.

வாரத்தில் 5 நாள்கள் மாலையிலும் வெளிப்புற நோயாளிகள் சிகிச்சைக்கான வசதிகள் செய்துதரப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் பிறப்பித்துள்ளாா். மேலும், தினமும் பகல் 12.30 மணிவரை மருத்துவா்களையும், நோயாளிகளையும் சந்திக்கலாம்.

அரசு விடுமுறை நாள்களில் மாலை நேர புறநோயாளிகள் பிரிவு இயங்காது. கூலி வேலைக்குச் செல்லும் மக்கள், அமைப்புசாரா தொழிலாளா்கள் காலை நேரத்தில் மருத்துவமனைக்கு வர இயலாத நிலையுள்ளது.

எனவே, டிசம்பா் மாதம் முதல் இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள 22-ஆம் எண் அறையான காயத்துக்கான சிகிச்சைப் பிரிவில் முதல் கட்டமாக மாலை நேர வெளிப்புற நோயாளிகள் சிகிச்சைப் பிரிவு தொடங்கப்படும் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.