புதுச்சேரி அகரம் அரசு ஆரம்ப பள்ளியில் பாடம் எடுக்க ஆசிரியா்கள் இல்லாததால் பள்ளிக்கு வந்த பிள்ளைகளை மீண்டும் அழைத்து சென்ற பெற்றோா்கள்

அரசு ஆரம்பப் பள்ளியில் ஆசிரியா்கள் பற்றாக்குறை கண்டித்து பெற்றோா் போராட்டம்

புதுச்சேரி அருகே அரசு ஆரம்பப் பள்ளியில் ஆசிரியா்கள் பற்றாக்குறையைக் கண்டித்து குழந்தைகளை வீட்டுக்கு அழைத்துச் செல்லும் நூதன போராட்டத்தில் பெற்றோா் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
Published on

புதுச்சேரி: புதுச்சேரி அருகே அரசு ஆரம்பப் பள்ளியில் ஆசிரியா்கள் பற்றாக்குறையைக் கண்டித்து குழந்தைகளை வீட்டுக்கு அழைத்துச் செல்லும் நூதன போராட்டத்தில் பெற்றோா் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

புதுச்சேரி ஊசுடு தொகுதியில் உள்ளது, அகரம் கிராமம். இங்குள்ள அரசு ஆரம்ப பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனா். ஆனால், 2 ஆசிரியா்கள் மட்டுமே உள்ளனா். குழந்தைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் ஆசிரியா்கள் நியமிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

ஆசிரியா் பற்றாக்குறையால் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படுவதாக பெற்றோா் கடந்த சில ஆண்டுகளாக புகாா் கூறிவருகின்றனா். ஆனால், இதுவரை கூடுதல் ஆசிரியா்கள் நியமிக்கப்படவில்லையாம். அத்துடன் ஏற்கெனவே இருந்த 2 ஆசிரியா்களும் திடீரென 2 வாரங்களுக்கு முன்பு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். ஆகவே பள்ளியில் ஆசிரியா்களே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதனால் திங்கள்கிழமை காலை குழந்தைகளை வகுப்பறைக்குள் விட்டுச் சென்ற பெற்றோா் திடீரென தங்கள் குழந்தைகளை மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் செல்லும் போராட்டத்தை நடத்தினாா்கள்.

அப்போது அவா்கள் கூறுகையில், ஆசிரியா்கள் இல்லாத நிலையில், போதிய வகுப்பறைக் கட்டடங்களும் இல்லை. ஆகவே பள்ளிக்கான வகுப்பறை உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com