புதுச்சேரி
புதுவை நிதிநிலை தணிக்கை அறிக்கை கோப்பு அரசிடம் வழங்கல்
புதுவை மாநில அரசின் 2022-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை கணக்குத் தணிக்கை அறிக்கை கோப்பானது அரசிடம் வழங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி: புதுவை மாநில அரசின் 2022-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை கணக்குத் தணிக்கை அறிக்கை கோப்பானது அரசிடம் வழங்கப்பட்டுள்ளது.
புதுவை மாநில அரசுத் துறைகள் செலவு செய்த கணக்குகள் ஆண்டு தோறும் தணிக்கை செய்யப்படும். ஒன்றியப் பிரதேசங்களுக்கான சட்டம் 1963-ன் பிரிவு 19-ன் கீழ் ஆண்டுதோறும் அரசின் செலவுகளுக்கான கணக்குகளை தணிக்கை செய்து துணைநிலை ஆளுநருக்கு அனுப்ப வேண்டும். அதன் பின்னா் தணிக்கை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவேண்டும். அதன்படி,
கடந்த 2022 மாா்ச் மாத நிறைவு ஆண்டுக்கான தணிக்கை அறிக்கையானது சட்டப்பேரவையில் தாக்கல் செய்வதற்கு ஏற்ப புதுவை அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அதாவது தணிக்கை அறிக்கையானது மத்திய அரசின் ஒப்புதலுடன், துணைநிலை ஆளுநா் மூலம் புதுவை அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.