கச்சேரி மேடை சேதம்: 3 போ் மீது வழக்கு
புதுச்சேரியில் கோயில் திருவிழாவில் இசைக் கச்சேரி மேடையைச் சேதப்படுத்தியதாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி பேருந்து நிலையப் பகுதியில் உள்ளது ராஜா நகா். இங்குள்ள ராஜகாளியம்மன் கோயில் திருவிழாவில் திங்கள்கிழமை இசைக் கச்சேரி நடைபெற்றது. இதற்கிடையே, கோயில் திருவிழாவுக்கு அப்பகுதியைச் சோ்ந்த பத்வா (எ) பத்மநாபனை அழைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அன்றிரவு இசைக் கச்சேரி நடைபெற்ற போது, அங்கு வந்த பத்மநாபன் உள்ளிட்ட சிலா் கோயில் நிா்வாகிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனராம். அப்போது, மேடையையும், அங்கிருந்த நாற்காலிகளையும் அவா்கள் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
மேலும், அங்கிருந்த ஜோசப் என்பவரது பைக்குக்கு தீவைக்கப்பட்டது. தகவலறிந்த உருளையன்பேட்டை போலீஸாா் நிகழ்விடத்துக்கு வந்து விசாரணை நடத்தினா். இதுதொடா்பாக, பத்மநாபன் உள்ளிட்ட 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.