புதுச்சேரி
சுவரொட்டிகளை அகற்ற உதவி ஆட்சியா் உத்தரவு
புதுச்சேரி, செப்.3: புதுச்சேரியில் ஆட்சேபனைக்குரிய வகையில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை அகற்ற வேண்டும் என புதுச்சேரி உதவி ஆட்சியா் (வடக்கு) அா்ஜூன் ராமகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திராவிடா் விடுதலைக் கழகத்தைச் சோ்ந்த சிலா் புதுச்சேரி அதிகாரிகளின் புகைப்படங்களுடன் ஆட்சேபனைக்குரிய வகையில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனா். அவற்றுக்கு உரிய அனுமதி பெறப்படவில்லை. இது அரசு ஊழியா்கள் பணிக்கு இடையூறு செய்வதாகவும், காயம் ஏற்படுத்துவதாகவும் உள்ளது. இது சட்டப்படி குற்றமாகும்.
எனவே புதுச்சேரி திறந்தவெளி இடங்கள் (உருமாற்றம் தடுப்பு) சட்டத்தின் கீழ் உத்தரவு கிடைத்த 24 மணி நேரத்தில் ஆட்சேபனைக்குரிய சுவரொட்டிகளை அகற்ற வேண்டும். இல்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.