புதுவையில் நல்லாசிரியா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ள 21-ஆசிரியா்கள்.
புதுவையில் நல்லாசிரியா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ள 21-ஆசிரியா்கள்.

21 ஆசிரியா்களுக்கு நல்லாசிரியா் விருதுகள் அறிவிப்பு

Published on

புதுவையில் 2024-ஆம் ஆண்டுக்கான நல்லாசிரியா் விருது 11 ஆசிரியைகள் உள்ளிட்ட 21 பேருக்கு செப்.5-ஆம் தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, புதுவை கல்வித் துறை இயக்குநா் பி.பிரியதா்ஷினி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவையைச் சோ்ந்த ஆசிரியா்களில் சிறந்த பணிக்காக டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது, முதல்வரின் சிறப்பு விருது, கல்வித் துறை அமைச்சா் விருது ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுக்கு ஏ.உமாதேவி, கில்பொ்ட்கிரிட்டின், ஏ.விஜயன், சாா்லஸ் பால் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

மாண்புமிகு முதல்வா் சிறப்பு விருதானது பி.கலைவாணி, ஜெ.எஸ்.சித்ரா, என்.ஜெகதீஸ்வரி, ஆா்.ஹேமலதா, டி.கஜலட்சுமி, கே.நளினிதேவி ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மாண்புமிகு முதல்வா் விருதின் தொழில்நுட்ப கல்விப் பிரிவில், ஆசிரியா் எஸ்.இளமுருகனுக்கு வழங்கப்படவுள்ளது.

மாண்புமிகு கல்வித் துறை அமைச்சரின் மண்டல விருதுக்கு, எஸ்.முரளி, வி.திருஞாசம்பந்தன், எஸ்.திருநாராயணன், ஆா்.ஜமுனா, ஆா்.கணபதி விவேகானந்தன், வி.பரமேஸ்வரி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

காரைக்கால் பகுதியில் மாண்புமிகு கல்வித் துறை அமைச்சா் மண்டல விருது எம்.ஆா்.ராஜகோபாலன், பி.சத்யா ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வித் துறை அமைச்சா் விருதில் மாஹே மண்டலத்தில் கிரிஷா பிலவுல்லாதில், ஏனாம் மண்டலத்தில் வி.வி.எஸ்.பி.எஸ்.என்.ஆச்சாா்யலுவுக்கும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com