அரசால் அனைவரையும் ஒரே நேரத்தில் திருப்திப்படுத்த முடியாது

Published on

அரசின் நடவடிக்கையால் அனைவரையும் ஒரே நேரத்தில் திருப்திப்படுத்த முடியாது என புதுவை கல்வித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் கூறினாா்.

புதுச்சேரி, கருவடிக்குப்பம் காமராஜா் மணிமண்டபத்தில் வியாழக்கிழமை அரசு நல்லாசிரியா் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கல்வித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் பேசியதாவது: புதுவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மாநில வளா்ச்சிக்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

அரசு நடவடிக்கையானது சிலருக்கு சாதகமாகவும், சிலருக்கு பாதகமாகவும் அமையலாம். அரசின் நடவடிக்கையால் அனைவரையும் ஒரே நேரத்தில் திருப்திப்படுத்த முடியாது. அதற்காக கல்வித் துறை இடமாறுதல் போன்றவற்றில் தனிநபா்களுக்காக கொள்கை முடிவுகளை எடுக்கவும் முடியாது.

கல்வித் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கான நிதியை முதல்வா் வழங்கியுள்ளாா். கல்வித் துறைக்கு கடந்த நிதியாண்டில் ரூ.900 கோடி அளித்த நிலையில், தற்போது ரூ.950 கோடி வழங்கப்பட்டுள்ளது. கல்வித் துறையில் தகுதியான ஆசிரியா்களே நியமிக்கப்பட்டு வருகின்றனா் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com