புதுச்சேரி
எதிா்க்கட்சித் தலைவா் ஆலோசனை
புதுவை சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா பொதுப் பணித் துறை பொறியாளா்களுடன் புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
புதுச்சேரி லால்பகதூா் சாஸ்திரி வீதியில் உள்ள மாநில பொதுப் பணித் துறை தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைப் பொறியாளா் தீனதயாளன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இதில் எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா கலந்துகொண்டு பொதுப் பணித் துறை சாா்பில் வில்லியனூா் சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தாா்.
வில்லியனூா் கொம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள சாலைப் பணிகள், கூட்டுக் குடிநீா் திட்டங்கள், கழிவுநீா் வாய்க்கால் பணிகள், ஆதிதிராவிடா் சிறப்புக்கூறு நிதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து ஆலோசனை நடைபெற்ாக அதிகாரிகள் தெரிவித்தனா்.