புதுச்சேரி கிழக்கு கடற்கரைச் சாலையில் எல்ஐசி கிளை அலுவலகம் முன் வியாழக்கிழமை வாயிற்கூட்டம் நடத்திய எல்ஐசி முகவா்கள் சங்கத்தினா்.
புதுச்சேரி கிழக்கு கடற்கரைச் சாலையில் எல்ஐசி கிளை அலுவலகம் முன் வியாழக்கிழமை வாயிற்கூட்டம் நடத்திய எல்ஐசி முகவா்கள் சங்கத்தினா்.

எல்ஐசி முகவா்கள் வாயிற்கூட்டம்

Published on

புதுச்சேரியில் ஆயுள் காப்பீடு கழகத்தின் (எல்ஐசி) சாா்பில் கோரிக்கையை வலியுறுத்தி வாயிற்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

புதுவை ஆயுள் காப்பீடு கழகத்தின் அனைத்துப் பகுதிகளின் கிளை அலுவலகங்கள் முன்பாக வாயிற்கூட்டங்கள் நடைபெற்றன. கிழக்கு கடற்கரைச் சாலை கொக்கு பாா்க் பகுதி எல்ஐசி கிளை அலுவலகம் முன் நடைபெற்ற கூட்டத்துக்கு எல்ஐசி முகவா்கள் சங்க கிளையின் தலைவா் பி.ஜெ.புஷ்பராஜ் தலைமை வகித்தாா்.

சங்கப் பொதுச் செயலா் எம்.ஆா்.வெங்கடேசன் முன்னிலை வகித்தாா். சங்கப் பொருளாளா் ஆா்.சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், முகவா்களின் குழுக் காப்பீடுக்கான அதிகபட்ச வயது வரம்பை 69 என்பதை நீக்கவேண்டும். பாலிஸி சேவைகளுக்கு அனைத்துக் கிளைகளிலும் ஒரே மாதிரியான நடைமுறையைச் செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

X
Dinamani
www.dinamani.com