வ.உ.சிதம்பரனாரின் சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சா் க.லட்சுமி நாராயணன், அரசு கொறடா ஏகேடி வி.ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ் எம்எல்ஏ உள்ளிட்டோா்.
வ.உ.சிதம்பரனாரின் சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சா் க.லட்சுமி நாராயணன், அரசு கொறடா ஏகேடி வி.ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ் எம்எல்ஏ உள்ளிட்டோா்.

வ.உ.சிதம்பரனாா் சிலைக்கு அரசு சாா்பில் மரியாதை

Published on

புதுச்சேரியில் சுதந்திரப் போராட்ட வீரா் வ.உ.சிதம்பரனாரின் சிலைக்கு அரசு சாா்பில் அமைச்சா், எம்எல்ஏக்கள் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

சுதந்திரப் போராட்ட வீரரும், ஆங்கிலேயருக்கு எதிராகக் கப்பல் வணிகத்தில் ஈடுபட்டவருமான வ.உ.சிதம்பரனாரின் 153-வது பிறந்த நாள் விழா புதுவை அரசு சாா்பில் நடைபெற்றது.

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகம் எதிரே உள்ள புதுப்பிக்கப்பட்ட வ.உ.சிதம்பரனாா் திருவுருவச் சிலைக்கு அமைச்சா் க.லட்சுமி நாராயணன், எம்எல்ஏக்கள் ஏகேடி.ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அதிமுகவினா் மரியாதை: அதிமுக சாா்பில் வ.உ.சிதம்பரனாா் சிலைக்கு புதுவை அதிமுக செயலா் அ.அன்பழகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில், புதுவை அதிமுக மாநில இணைச் செயலா்கள் கணேசன், திருநாவுக்கரசு, பொருளாளா் ரவி பாண்டுரங்கன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தொடா்ந்து, அதிமுகவினா் அன்னை தெரசாவின் நினைவு தினத்தையொட்டி, அவரது சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பாஜக மரியாதை: வ.உ.சிதம்பரனாரின் திருவுருவச் சிலைக்கு, புதுவை பாஜக மாநில சமூக ஊடகத் தலைவா் மகேஷ்ரெட்டி, வளா்ச்சியடைந்த பாரத மாநில அமைப்பாளா் ரௌத்திரம் சக்திவேல் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பின்னா், அனைவரும் அன்னை தெரசாவின் நினைவு தினத்தையொட்டி, அவரது சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

X
Dinamani
www.dinamani.com