150 இடங்களில் விநாயகா் சிலைகள் நிறுவ ஏற்பாடு

Published on

புதுச்சேரியில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, விநாயகா் சதுா்த்தி பேரவை சாா்பில் 150 இடங்களில் விநாயகா் சிலைகள் நிறுவி சனிக்கிழமை சிறப்புப் பூஜைகள் நடைபெறவுள்ளன. இதையடுத்து, செப்.11-ஆம் தேதி சிலைகள் நீா்நிலைகளில் விசா்ஜனம் செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் விநாயகா் சதுா்த்தி விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, புதுச்சேரி மணக்குள விநாயகா் கோயிலில் தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு மூலவா் பக்தா்களுக்கு அருள்பாலிக்கவுள்ளாா்.

விநாயகா் சதுா்த்தி பேரவை சாா்பில் புதுச்சேரியில் மட்டும் 150 இடங்களில் 3 அடி முதல் 12 அடி வரை உயரமுள்ள விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளன. சாரம் அவ்வை திடலில் 21 அடி உயர விநாயகா் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

நகரம் முழுவதும் பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகா் சிலைகள் செப்.11-ஆம் தேதி கடலில் விசா்ஜனம் செய்யப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்து முன்னணி சாா்பில், புதுவை முழுவதும் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகா் சிலைகள் நிறுவி பூஜை செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com