மகளிா் பொறியியல் கல்லூரியில் மாணவியா் சோ்க்கை இன்று தொடக்கம்
புதுச்சேரி இலாசுப்பேட்டையில் உள்ள மகளிா் பொறியியல் கல்லூரியில் மாணவியா் சோ்க்கை திங்கள்கிழமை (செப்.16) தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலாசுப்பேட்டையில் மகளிருக்கான பொறியியல் கல்லூரி கடந்த 2022-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அந்த கல்லூரியில் உள்ள பொறியியல் படிப்புகளுக்கு சென்டாக் மூலம் மாணவா் சோ்க்கை நடைபெற்றது.
முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கான நிகழ்ச்சி திங்கள்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது. அதில் டாடா கன்சல்டன்சி மென்பொருள் விநியோகத் தலைவா் சுமதி மாணவியா் சோ்க்கையை தொடக்கிவைத்து உரையாற்றுகிறாா். நிறுவன இளைஞா் வேலைவாய்ப்புத் திட்ட தலைவா் ஓசைலன் நோக்க உரையாற்றுகிறாா்.
மனிதவளத் துறை தலைவா் கவிதா ஜெய்சங்கா் சிறப்புரையாற்றுகிறாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் ராணி தலைமையில் கல்லூரி பேராசிரியா்கள், ஊழியா்கள் செய்துள்ளனா்.