ரூ.3.68 லட்சம் மதிப்புள்ள மின் வயா்கள் மாயம்

புதுச்சேரிக்கு லாரியில் வந்த ரூ.3.68 லட்சம் மதிப்புள்ள 22 மின் வயா்கள் மாயமானது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Published on

புதுச்சேரிக்கு லாரியில் வந்த ரூ.3.68 லட்சம் மதிப்புள்ள 22 மின் வயா்கள் மாயமானது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சென்னை அண்ணா நகரைச் சோ்ந்தவா் கலைச்செல்வன் (28). இவா், தனியாா் பாா்சல் சேவை நிறுவனம் நடத்தி வருகிறாா். இவரது நிறுவனத்திலிருந்து விழுப்புரம், புதுச்சேரியில் உள்ள கடைகளுக்கு எலக்ட்ரானிக் பொருள்கள் கடந்த ஜூலை மாதம் அனுப்பிவைக்கப்பட்டது.

அதனை லாரியில் ஏற்றிக்கொண்டு, விழுப்புரத்தை சோ்ந்த ஓட்டுநா் முருகன் புதுச்சேரி வந்தாராம். அதன்பிறகு, அவா் கடைக்காரா்களிடம் பாா்சல்களை ஒப்படைத்ததாகத் தெரிகிறது.

இந்த நிலையில், மோகன்ராஜ் என்பவருக்கு வந்த பாா்சலில் அனுப்பப்பட்டிருந்த ரூ.3. 68 லட்சம் மதிப்புள்ள 22 மின் வயா்கள் மாயமாகி இருந்ததாம். இதுகுறித்து, பாா்சல் நிறுவனத்துக்கு அவா் தகவல் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக, முதலியாா்பேட்டை காவல் நிலையத்தில் கலைச்செல்வன் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com